

முதல் வசந்தம்...
--------------------
கோட்டான்களும் , கழுகுகளும் மட்டுமே
வந்து வந்து போன
எனது வாழ்க்கைக் காட்டினிலே...
முதன் முதலாக
மயிலாக நீ வந்து சேர்ந்தாய் !
முகாரியிலேயே
மூழ்கிப் போன
என் வாழ்க்கை வீணைக்கு...
முதன் முதலாக
மோகனத்தைப்பயிற்றுவிக்கும்
'வாணி'யாக நீ வந்தமர்ந்தாய்.
-யாழ் சுதாகர்
No comments:
Post a Comment